tamilnadu

img

சிபிஐ மூத்த தோழர் ஏ.ஆறுமுகம் காலமானார்...

சென்னை:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினர், விவசாயிகள் இயக்கத்தின் முன்னோடித் தலைவர் பெத்தநாயக்கன்பாளையம் ஏ.ஆறுமுகம் (72) திங்களன்று மாலை அவரது இல்லத்தில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சிறுவயதிலேயே இணைந்து கொண்ட ஏ.ஆறுமுகம்  கடந்த 59 ஆண்டுகளாக, கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் தொடர்ந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருபவர்.மின்கட்டண உயர்வை எதிர்த்து நடந்த விவசாயிகள் போராட்டத்திலும், நில உரிமைப் போராட்டத்திலும்  ஈடுபட்டு 50 நாட்களும் மேல் சிறையில் இருந்தவர்.பழங்குடி மக்களை அணிதிரட்டி சங்கம் அமைத்து, அதன் மாவட்டச் செயலாளராக செயல்பட்டவர்.மறைந்த தலைவருக்கு மனைவியும், மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.அவர் மிக சிறந்த பாடகர். பொதுக்கூட்டம், மாநாடு, போராட்டங்கள் என எல்லா நிகழ்வுகளிலும் தோழர் ஏ.ஆறுமுகத்தின் வெண்கலக் குரல், கொள்கை பாடால்களை குயிலோசையாக முழங்கிடும்.அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செவ்வணக்கம் செலுத்துகிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.