tamilnadu

img

கொரோனா நிவாரணம்.... நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி வழங்கினார்

சென்னை
கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள மத்திய, மாநில அரசுகள் பொது நிவாரணம் திரட்டி வருகின்றன. இதேபோல தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  கொரோனாவுக்கு பொது நிவாரண நிதி வழங்குமாறும்,  அவ்வாறு வழங்கப்படும்  நன்கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டு எனவும் தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகரான அஜித் குமார் கொரோனா தடுப்பு பணி மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு ஆகியவற்றை சேர்த்து ரூ.1.25 கோடியை வழங்கியுள்ளார்.
முதலமைச்சர் நிவாரண நிதி, பிரதமர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கு தலா ரூ.50 லட்சம் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.1.25 கோடியை நடிகர் அஜித்குமார் நிதியுதவியாக வழங்கியுள்ளார்.

;