tamilnadu

img

கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் தமிழகத்திலேயே உற்பத்தி.. முதல்வர்....

சென்னை:
கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜனை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் ஆலைகளை நிறுவ விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரும் 31ஆம்தேதிக்குள் விருப்ப கருத்துகள் கோரப் பட்டுள்ளது.இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆக்சிசன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், ஓர் நிரந்தர தீர்வாக நமது மாநிலத்திலேயே ஆக்சிசன் உற்பத்தி துவக்க அரசு திட்டமிட்டுள்ளது.மாநிலத்திற்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி, மருந்துகளை தமிழகத்திலேயே  உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்கு  தீர்வாக தமிழகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க வேண்டும்.

மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவற்றை தொழில்கூட்டு முயற்சி மூலம் உருவாக்க வேண்டும். உற்பத்தி நிறுவனங்க ளுக்கு  தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆதரவளிக்கும்.குறைந்தபட்சம் ரூ.50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் செயல்படும்.ஆலைகளை நிறுவ விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரும் 31ஆம் தேதிக்குள் விருப்ப கருத்துகள் கோரப்பட்   டுள்ளது.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

                               ***************

புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணம்
தமிழக அரசு வெளியிட்டிருக்கும் மற்றொரு அறிக்கையில், தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 15 ஆம் தேதியில் இருந்து முதல் தவணையாக ரூ.2000 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப் படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.2,14,950 புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் முதல் தவணை கொரோனா நிதியான ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

;