tamilnadu

img

துறைமுகத்தில் தடுக்கப்படும் மூலப்பொருட்கள்... இந்திய ஜவுளித் துறை உற்பத்தி கடும் பாதிப்பு!

புதுதில்லி:
சீனாவிலிருந்து வரும் மூலப்பொருட்கள் துறைமுகங்களிலேயே நிறுத்தப்பட்டு இருப்பதால், இந்திய ஜவுளித் துறைபாதிப்பைச் சந்தித்து வருவதாக தொழில்துறையினர் கூறியுள்ளனர்.

இந்திய ஜவுளித் துறைக்குதேவையான இயந்திரங்கள், பட்டன்கள், தையல் இயந்திரங்கள், உலோக பொருட்கள், உதிரிபாகங்கள் அதிகளவில் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஜவுளித் துறை மையமான திருப்பூர் தனதுதேவைகளுக்காக 90 சதவிகிதம் சீனாவையே சார்ந்து இருக்கிறது. அங்கிருந்துதான் தையல்இயந்திரங்கள், பாஸ்டெனர் கள், ஊசிகள், பட்டன்கள் போன்றபொருட்களை இறக்குமதி செய்து வருகிறது.ஆனால், சீனாவுடன் எல் லையில் ஏற்பட்ட ராணுவ மோதலைத் தொடர்ந்து, அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட பொருட்களை துறைமுகங் களிலேயே இந்தியா நிறுத்திவைத்திருப்பதால், இந்திய ஜவுளித் துறைக்கு தேவையான பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதுஜவுளித்துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஜவுளிப் பொருட்களை துருக்கி, வியட்நாம், தாய் லாந்து, தைவான் போன்ற நாடுகளில் இருந்து வாங்கிவிடலாம் என்றாலும், இயந்திர உதிரி பாகங்களை சீனாவிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பொருட் களின் விலையும் இதற்கு முக்கியக் காரணம். சீன பொருட்களின் விலை மிகக்குறைவாகஇருக்கிறது. ஆடை உற்பத்தியாளர்கள் ஆடைப் பசைகளுக்குக் கூட சீனாவை நம்பியேஇருக்கின்றனர். ஆகவே, இந்தப் பிரச்சனையில் அரசு விரைவில் தீர்வு காண வேண்டுமென்று ஜவுளித் துறையினர்கோரிக்கை விடுத்துள்ளனர்.

;