tamilnadu

img

தமிழகத்தில் கொரோனா தொற்று 1,596 ஆக அதிகரிப்பு

சென்னை:
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,596 ஆக அதிகரித்துள்ளது. திங்களன்று 1,520-ஆக இருந்த எண்ணிக்கை செவ்வாயன்று 1,598 ஆக அதிகரித்துள்ளது. செவ்வாயன்று மட்டும்  ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர் உட்பட 76 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வயான்று 5,458 பேருக்கு ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 47,168 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. 22 ஆயிரத்து 254 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 145 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர்.

கொரோனா தொற்று அறிகுறி இருக்கலாம் என்ற அடிப்படையில் 1,917 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர். செவ்வாயன்று 178 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதுவரை மொத்தம் 635 பேர் குணமடைந்துள்ளனர். வீடு திரும்பியவர்களை கழித்துவிட்டால் 940 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்று ஆய்வகங்கள் மொத்தம் 33 உள்ளது. செவ்வாயன்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

செவ்வாயன்று மட்டும் சென்னையில் 55 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்காசியில் ஐந்து பேரும், விழுப்புரத்தில் நான்கு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தஞ்சாவூர். செங்கல்பட்டில் தலா மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர், நாமக்கல், திருவாரூர், காஞ்சிபுரத்தில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.‘

முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சுகாதாரத்துறை செயலாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் தமிழகம் இரண்டாம் கட்ட நிலையிலேயே உள்ளதாகக் கூறிவருகின்றனர். சென்னையில் கொரோனா தொற்றின் வேகத்தைப் பார்த்தால் சமூக பரவலில் தமிழம் அடியெடுத்துவைத்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுவதாக விஷயமறிந்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

;