tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 5,875 பேருக்கு கொரோனா தொற்று.... 5,571 பேர் குணமடைந்துள்ளனர்...

சென்னை 
கடந்த ஒருமாத காலமாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு டாப் ஆர்டரில் உள்ளது. இதனால் குறுகிய காலத்தில் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இன்று (ஞாயிறு) மேலும் 5,875 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 98 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,132 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருந்த 5,571 பேர் குணமடைந்த நிலையில், மாநிலத்தில் மொத்தமாக 1,96,783 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 56,998 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

;