tamilnadu

img

தொடர் போராட்டம்: இபிஎப் பென்ஷனர்கள் அறிவிப்பு

சென்னை, டிச. 29 - இபிஎப் பென்ஷனர்க ளின் ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி 2020 பிப்ரவரி 3 முதல் 8வரை தொடர் போராட்டம் நடத்த உள்ளனர். சென்னை இபிஎப் பென்ஷனர்கள் நலச்சங்கத் தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஞாயிறன்று (டிச.29) கிண்டியில் நடைபெற்றது. 1995 ஆம் ஆண்டு முதல் இபிஎப் ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படடு வரு கிறது. இத்திட்டத்தில் நாடு முழுவதும் 64 லட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கு ஒரேமாதிரியாக ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் ஓய்வூ தியத்தை உயர்த்த வலியு றுத்தி தொடர் போராட்டம் நடத்துவதென்று பொதுக் குழுவில் முடிவெடுக்கப் பட்டது. வருங்கால வைப்புநிதி திட்டம், பென்சன் திட்டம், இஎஸ்ஐ திட்டம் போன்ற அனைத்து சமூக நலத் திட்டங்களையும் மத்திய அரசு அழித்து வருவதற்கு பொதுக்குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  நலச்சங்கத்தின் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிஐடியு அகில இந்தியதுணைத் தலை வர் ஏ.கே.பத்மநாபன், அகில இந்திய இபிஎஸ் பென்ஷனர் நலச் சங்கத்தின் தலைவர் கே.கனகராஜ், சென்னை பென்ஷனர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.பி.பாபு, நிர்வாகிகள் டி.சுரேஷ்குமார், தேவேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.

;