tamilnadu

img

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ. 7,500 நிவாரணம் வழங்கிடுக

கள்ளக்குறிச்சி, ஜூன் 10- கொரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வா தாரம் இழந்து தவிக்கும் கட்டுமானத் தொழிலா ளர்கள் குடும்பத்தினருக்கு மாதம் 7,500 ரூபாய்  நிவாரணம் வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புத னன்று (ஜூன் 10) மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. தமிழக அரசு கட்டுமானம் உள்ளிட்ட பல முறைசாரா தொழிலாளர்களுக்கு அறிவித்த பொதுமுடக்க கால நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும், உழவர் பாதுகாப்பு அட்டையில் பெயர் இருந்தால் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலவாரிய படிவத்தில் கையொப்பமிட மறுக்கும் கிராம நிர்வாக  அலுவலர்களுக்கு முறையான வழிகாட்டு தலை வழங்க வேண்டும்,  ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்க வேண்டிய மூன்று மாதகால ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், தொடர்ந்து வழங்க வேண்டும், வருவாய் வட்ட அளவில் நல வாரிய பதிவிற்கு முகாம்கள் அமைத்து புதிய  உறுப்பினர்களை பதிவு செய்ய வேண்டும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தனியாக நல வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனு வில் வலியுறுத்தப்பட்டிருந்தன. மாவட்ட துணைத் தலைவர் வி.சிவா தலை மையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.சேகர், பொருளா ளர் ஆர்.பச்சையப்பன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். சிஐடியு மாவட்டத்  தலைவர் கே.விஜயகுமார், செயலாளர் எம். செந்தில், பொருளாளர் ஏ.வீராசாமி உள்ளிட்  டோர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலா ளர்கள் பங்கேற்றனர். போராட்ட நிறைவில் 5 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட வருவாய்  அலுவலரிடம் மனுக்களை அளித்தனர்.

;