சென்னை, மே 11- கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ள கட்டிட ஒப்பந்தகாரர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவ ஜேஎஸ்டபிள்யூ பெயிண்ட்ஸ் முன்வந்துள்ளது. “ஸ்டார் ஒப்பந்த திட்டம்” மூலமாக இந்த கடினமான காலகட்டத்தில் ஒப்பந்ததாரர் பங்குதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு எளிதான மற்றும் நேரடி பலன்களை இந்த நிறுவனம் வழங்கியுள்ளது. இதனால் தென்னிந்தியா மேற்கிந்தியாவை சேர்ந்த 4,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்ற தொழில்முறை கருவிகளை வழங்கி வருகிறது.