tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

தற்காலிக பேருந்து நிலையம் உருவாக்கம்

திருப்பூர், அக்.16- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் பயணிகளின் வசதிக்கான தற்காலிக பேருந்து நிலையம் உரு வாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து காவல்துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், பழைய பேருந்து நிலையம், திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நல்லூர் வழி யாக காங்கேயம், கரூர் செல்லும் பேருந்துகளும், பல்லடம் வழியாக கோவை செல்லும் பேருந்துகளும், பல்லடம் வழி யாக உடுமலை, பொள்ளாச்சி செல்லும் பேருந்துகளும், மங்கலம், சோமனூர் வழியாக கோவை செல்லும் பேருந்துக ளும் மற்றும் ஈரோடு, பவானி செல்லும் பேருந்துகளும் இயக் கப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. அதன்படி திருப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணா நிதி பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள, அரசு மருத்துவ மனை பழைய புறநோயாளிகள் பிரிவு, மாவட்ட சித்தா மருத்து வமனை வளாகத்தில் தற்காலிக பேருந்து நிலையம் உருவாக் கப்பட்டுள்ளது. மேலும், புதனன்று தரைத்தளத்தை சமப்ப டுத்தும் பணியும், பயணிகள் நின்று பஸ் ஏற மரத்தடுப்பு, பேருந்துகள் உள்ளே, சென்று வெளியே வரும் வகையில் நுழைவு வாயில் சீரமைப்புப் பணியும் நடைபெற்றது. இங்கு சேலம், சென்னை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் பிற தென் மாவட்டங்களுக்குச் செல்லும்  பேருந்துகள் அனைத்தும் கோவில் வழி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். மேலும், கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளும், திருச்சி, கரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை வழித்தடங்களில் செல்லும்  அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திலி ருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கலில் குளிக்க அனுமதி

தருமபுரி, அக்.16- அதிக நீர்வரத்து காரணமாக ஒகேனக்கலில் குளிக்க  விதிக்கப்பட்ட தடையை, மாவட்ட நிர்வாகம் நீக்கியுள்ளது. தமிழ்நாடு - கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைவ தும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஒகே னக்கலுக்கு புதனன்று நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடி இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்த தால், வியாழனன்று காலை 8 மணி நிலவரப்படி 9,500 கனஅடி யாக குறைந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பரிசல்  பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும்,  அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறை களுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், 5  நாட்களுக்கு பிறகு வியாழனன்று முதல் சுற்றுலாப் பயணி கள் அருவி மற்றும் ஆற்று அருவியில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

உலக மாணவர் தின விழா

திருப்பூர், அக்.16- திருப்பூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில், முன்னாள் குடியரசுத் தலை வர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, புதனன்று உலக மாணவர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நி கழ்வில் சிறப்பு விருந்தின ராக, எழுத்தாளர் கவி உழ வன் கலந்து கொண்டு “இளைய சமுதாயமே எழுக!” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந் நிகழ்வில் கல்லூரியின் செய லாளர் அருள் சீலி, கல்லூரி யின் முதல்வர் சகாய தமிழ்ச் செல்வி மற்றும் பேராசிரி யர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.