சாதி ஆணவப்படுகொலைக்கு கண்டனம்
மயிலாடுதுறை வைரமுத்து சாதி ஆணவப் படுகொலையை கண்டித்து புதனன்று (செப்.16) சைதாப்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க தென்சென்னை மாவட்டத் தலைவர் என்.குமரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ச.லெனின்(தீஒமு), அமர்நீதி, ச.ஆனந்தகுமார் (மாணவர் சங்கம்), எம்.ஆர்.சுரேஷ் (வாலிபர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.