தோழர் ஆர். உமாநாத் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலியையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆறுமுக நயினார், வெ.ராஜசேகரன் மற்றும் டி.கே.ராஜன், மாநிலக்குழு அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.