tamilnadu

img

தோழர் பி.பாக்கியராஜ் மறைவு: சிபிஎம் இரங்கல்

சென்னை:
செல்வம் ஊறுகாய்  நிறுவன உரிமையாளர் தோழர்பி.பாக்கியராஜ் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்லைச் சேர்ந்த செல்வம் ஊறுகாய் நிறுவன உரிமையாளர் தோழர் பி.பாக்கியராஜ் மறைவிற்குமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடுமாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்து தீவிரமாக பணியாற்றியவர். சிவகாசி பகுதியில் கட்சியின் ஸ்தாபகர். தொண்டர் துரைச்சாமியுடன் கட்சி இயக்கங்களில் செயல்பட்டவர்.சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கியவர் பின்னாளில் சிறிய அளவில் ஊறுகாய் தயாரிப்பில் ஈடுபட்டு தனது கடும் உழைப்பால் செல்வம் ஊறுகாய்கம்பெனி என மிக உயர்ந்த நிலையை எட்டியவர்.கட்சிக்கு பெரும் ஆதாரமாக திகழ்ந்தவர். கட்சியின் நாளேடான தீக்கதிர், செம்மலருக்கு தொடர்ந்து விளம்பரங்கள் மூலம் பெரும் உதவி செய்து வந்தவர். தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் இயற்கை பேரிடர் ஏற்பட்ட போது, தாமாக முன்வந்து நிதி மற்றும் பொருட்களை வாரி வழங்கியவர். மேலும் வர்க்க, வெகுஜன அமைப்புகளுக்கு பேருதவி செய்து வந்ததோடு, கலை இலக்கிய அரங்கின் கௌரவத் தலைவராகவும் இருந்துபணியாற்றி வந்தார். அவரின் மறைவு கட்சிக்கு பேரிழப்பாகும்.அவரது மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும் கட்சியின் மாநிலச் செயற்குழு தனது அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.