tamilnadu

img

தோழர் என்.சங்கரய்யா நூற்றாண்டு விழா.... சிபிஎம் மாநில செயற்குழு வேண்டுகோள்....

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் களில் ஒருவரும், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்களின் நூற்றாண்டு 2021 ஜூலை 15 வியாழனன்று பெரும் உற்சாகத்துடன் துவங்குகிறது. இது தமிழகம் முழுவதுமுள்ள கட்சி அணிகளுக்கு பெரும் உத்வேகம் அளிக்கும் நிகழ்வாகும்.

மாநிலம் முழுவதும் கட்சியின் சார்பில்சங்கரய்யா நூற்றாண்டு விழாவை கிளைகள் தோறும் செங்கொடி ஏற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான சாதனைகளையும், தோழர் சங்கரய்யாவின் தியாகப்பூர்வமான வாழ்க்கையையும் விளக்கும் வகையிலும் உற்சாகத்துடன் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.அன்றைய தினம் தீக்கதிர் சிறப்பிதழ், தமிழக, கேரள முதல்வர்களின் வாழ்த்துச்செய்தி, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும்அனைத்து அரசியல் கட்சித் தலைவர் களின் வாழ்த்துச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், சிறப்பு புகைப்படங்கள், கவிதைகள் உள்ளிட்ட அம்சங்களுடனும் வாழ்த்துவிளம்பரங்களுடனும் ரூ.10 விலையில் வெளியாகிறது. இச்சிறப்பிதழ் அனைத்துமாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விநியோகிக்கப்பட உள்ளன.

தோழர் என்.சங்கரய்யாவை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துமகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்று அனைத்து தோழர்களும் ஆதரவாளர்களும் விரும்புவது இயல்பானதே. எனினும் தற்சமயம் கொரோனா காலமாக இருப்பதால், தோழர் சங்கரய்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு கட்சித் தோழர்கள் நேரில் வருவதை தவிர்த்திட வேண்டுமென கட்சியின் மாநில செயற் குழு கேட்டுக் கொள்கிறது.

கே.பாலகிருஷ்ணன்,மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

படத்தில் சங்கரய்யா ஓவியம் : லெனின் பாபு... 

;