புதுக்கோட்டை, ஜன.9- அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும் என மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி புள்ளாச்சி குடியிருப்பு அரசு தொடக்கப் பள்ளியில் அரசு மற்றும் தனி யார் பங்களிப்பில் கலையரங்கம், பேவர் பிளாக், ஸ்மார்ட் வகுப்பறை, சுற்றுச்சுவர் உட்பட ரூ.25 லட்சத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் திறப்பு விழா பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் தலைமையில் நடைபெற்றது. கட்டமைப்பு களை திறந்து வைத்து அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பேசுகையில், ‘‘அரசு மற்றும் பொதுமக்கள் இணைந்து கடந்த 6 மாதங் களில் புள்ளாச்சி குடியிருப்பு அரசு தொடக்கப் பள்ளியில் சுமார் ரூ.25 லட்சத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு அரசிடம் பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதோடு, பொதுமக்கள் ஒரு பங்கு தொகை செலுத்தி னால் அதில் இருந்து இரு மடங்கு தொகை யை அரசு செலுத்தக்கூடிய ‘நமக்கு நாமே’ திட்டமும் உள்ளது. இதுபோன்று அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும். பள்ளி வளர்ச்சி என்பதுதான் ஒவ்வொரு குடும்பத்தினரின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். ஆலங்குடி தொகுதியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். விழாவில், கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ எம்.சின்னதுரை, மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க) சண்முகம், வட்டாட்சி யர் செந்தில்நாயகி, ஒன்றியக் குழுத் தலை வர் வள்ளியம்மை தங்கமணி உள் ளிட்டோர் பேசினர்.