tamilnadu

img

தோழர் எம்.கலைச்செல்வி காலமானார்

தோழர் எம்.கலைச்செல்வி காலமானார்

சென்னை, ஆக.28 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலந்தூர் பகுதிக்குழு முன்னாள் உறுப்பினர் தோழர் எம்.கலைச்செல்வி வியாழனன்று (ஆக.28) காலமானார். அவருக்கு வயது 56. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஆலந்தூர் பகுதி முன்னாள் செயலாளரான அவர் மூவரசம்பட்டு ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் செயலாற்றியவர். அவரது உடல் அஞ்சலிக்காக எண்.1/17, பாரதியார் தெரு, மூவரசம்பட்டு, சென்னை-91 (ஊராட்சி அலுவலகம் எதிரில்) என்ற முகவரியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு சிபிஎம் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் பா.ஜான்சிராணி, செயற்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சரஸ்வதி எம்.சி., எஸ்.அரிகிருஷ்ணன், அசோகன், டி.அரவிந்தன், எஸ்.மனோன்மணி, அனைத்துத்துறை ஓய்வூதி யர்கள் சங்கத் தலைவர் நெ.இல.சீதரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கலைச்செல்வியின் இறுதி நிகழ்ச்சி வெள்ளியன்று (ஆக.29) மதியம் 2 மணிக்கு அளவில் மூவரசம்பட்டு இடுகாட்டில் நடைபெறுகிறது. சிபிஎம் ஆலந்தூர் பகுதி குழு உறுப்பி னரும், சிஐடியு தென்சென்னை மாவட்டக் குழு உறுப்பினருமான மோகன்ஜி-யின் இணையர் எம்.கலைச்செல்வி என்பது குறிப்பிடத்தக்கது.