tamilnadu

img

தோழர் ஜெயிலான் 6 வது நினைவு தினத்தையொட்டி ரத்ததான  முகாம்

தோழர் ஜெயிலான் அவர்களின் 6 வது நினைவு தினத்தையொட்டி மாதவரத்தில் உள்ள “எங்க வாப்பா’’ வீட்டில் ரத்ததான  முகாம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் , நிர்வாகிகள்  முத்து, ரவிச்சந்திரஹாசன், சிஐடியு தலைவர் ஏ.ஜி.காசிநாதன், சிபிஎம் மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்  இரா.முரளி, வடசென்னை மாவட்டக்குழு உறுப்பினர் சி.சுந்தரராஜ், சிபிசிஎல் தொழிற்சங்க நிர்வாகி வைத்தியலிங்கம், மூத்த பத்திரிகையாளர் அ.குமரேசன், எஸ்.ராணி, தமிழ்செல்வி (மாதர்சங்கம்), ஜோதி(தமுகஎச), ஸ்டான்லி மருத்துவர் ஸ்ரீதேவி, சர வணத்தமிழன், நித்தியராஜ் (வாலிபர்சங்கம்), வழக்கறிஞர் வீ.ஆனந்தன்(சிபிஎம்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். உடல்ஆரோக்கியம், தற்காப்பு கலைகுறித்து வகுப்பு நடைபெற்றது.