tamilnadu

img

முதல் தலைமுறை தொழில்  முனைவோரை கண்டறிய போட்டி

சென்னை, நவ. 27- சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவுடன் இணைந்து லோட்டோகார்ப் மற்றும் லோட்டே ஆக்சிலரேட்டர் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து போட்டி ஒன்றை நடத்தின. லோட்டே ஸ்டார்ட்- அப் காம்படிஷன் வீக் என்ற அந்தப்போட்டி நம்பிக்கைக்குரிய புதிய தலைமுறை தொழில்நுட்ப தொழில்முனைவோரை கண்டறிவதாகும். இந்த போட்டியில் ரூ. 20 லட்சம் மகா பரிசு வெல்வதற்காக, குறும்பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்கள் மேடையில் ஒன்றோ டொன்று போட்டியிட்டன. நாள் முழுவதும் நடைபெற்ற போட்டியில் ஃபேப்ஹெட்ஸ், டிடெக்ட் டெக்னாலஜி மற்றும் ஏரோஸ்ட்ரோவிலோஸ் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் முறையே ரூ.20 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் 5 லட்சம் என்ற ஒரு ரொக்கப் பரிசை வென்றன. சென்னையில் கொரிய துணைத் தூதர் . கிம் `ஹியுங்டே,  ஐஐடி ஆராய்ச்சி பூங்கா தலைமை புத்தாக்க அதிகாரி  ரமேஷ் சந்தானம்  உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.