சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க ஆணையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட காலமாக சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தது. இந்நிலையில், சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்கள் கொண்ட இந்த ஆணையம் பல்வேறு தரப்பிலும் கருத்துகளை பெற்று உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும், அதன் அடிப்படையில் அரசு சட்டங்கள் இயற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
