ரத்ததான செயல்பாடுகளுக்கு ஆட்சியர் பாராட்டு
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று (அக்.6) மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பாக தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், ரத்த தான முகாம் ஏற்பாட்டாளர்கள் 84 அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகளை கவுரவிக்கும் விதமாக பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். உடன் முதல்வர், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
