tamilnadu

img

உளுந்தூர்பேட்டையில் புதிதாக துவங்கிய அரசு கலைக் கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்

உளுந்தூர்பேட்டையில் புதிதாக துவங்கிய  அரசு கலைக் கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்

கள்ளக்குறிச்சி, ஜூலை 1- உளுந்தூர்பேட்டையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலைக் கல்லூரி யில் முதலாம் ஆண்டு வகுப்புகள் திங்க ளன்று (ஜூன் 30) தொடங்கப்பட்டது. இதை யடுத்து, மாணவர்களுக்கு ஒரு வார கால அறிமுக பயிற்சி திட்டம் சட்டமன்ற உறுப்பி னர் ஏ.ஜே.மணிகண்ணன் மற்றும் கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்தனர். உளுந்தூர்பேட்டை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய அரசு கலைக்கல்லூரி இந்த ஆண்டு முதல் துவங்கப்படும் என தமிழக அரசால் அறிவித்து, தற்காலிக கட்டிடத்தில் கல்லூரி துவங்கப்பட்டது. கல்லூரிக்கு முதல் நாள் வருகை புரிந்த மாணவர்களை உளுந்தூர்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்ணன் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் மலர் தூவி வரவேற்று இனிப்புகள் மற்றும் நோட்டு பேனாக்களை வழங்கினர். இந்த ஆண்டு முதல் செயல்படும் இந்த அரசு கலை அறிவியல் கல்லூரி யில் 290 இடங்களில் 203 மாணவ மாணவி யர் கவுன்சிலிங் அடிப்படையில் சேர்க்ககப்  பட்டுள்ளனர். மீதமுள்ள இடங்கள் மறு அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என கல்லூரி முதல்வர் தெரி வித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆங்கிலத் துணைத் தலைவர் ஜே.வின்சென்ட் தனிநாயகம் வர வேற்றார். கல்லூரி முதல்வர் கு.செல்வராஜ் தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.கே.பழனி, சிபிஎம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெ.ஜெயக்குமார், வாலிபர் சங்க நகரத் தலைவர் தீபன்ராஜ், கல்லூரி போராட்டக் குழு, உளுந்தூர்பேட்டை நகர வளர்ச்சி குழு மற்றும் திமுக முக்கிய பிரமுகர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.