சிஐடியு புதுச்சேரி மாநாடு பேரணியுடன் துவக்கம்
புதுச்சேரி, செப்.27- இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) புதுச்சேரி மாநில 13 வது மாநாடு பேரணியுடன் சனிக்கிழமை(செப்.28) துவங்கியது. சிஐடியு புதுச்சேரி மாநில 13வது மாநாடு செப்.27மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தோழர்கள் பொன்முடி நுழைவு வாயில், தோழர் டி.குணசேகரன் நினை வரங்கத்தில் இம் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டின் துவக்கமாக புதுச்சேரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து செங்கொடி பேரணி புறப்பட்டது. அண்ணா சிலை, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற ஊர்வலம் லெனின் வீதியில் உள்ள மாநாட்டு அரங்கை சென்றடைந்தது. ஜூலை 30 தியாகிகள் நினைவாக எம்.பி. மதி வாணன், கே.கலியன் ஆகி யோர் தலைமையில் கொண்டுவரப்பட்ட சுடர் மாநாட்டு திடலை வந்த தடைந்தது. பின்னர் நடை பெற்ற மாநாட்டிற்கு சிஐ டியு மாநிலத் தலைவர் என்.பிரபுராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ஜி.சீனுவாசன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஆர்.ரவிச்சந்திரன் வர வேற்றார். சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தரராசன் துவக்கி வைத்து உரையாற்றினார். இன்று (செப்.28) பிரதி நிதிகள் மாநாடு நடை பெறுகிறது.
