பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
தருமபுரி, செப். 29- பஞ்சாலைத் தொழிலாளர்க ளுக்கு போனஸ் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, சிஐடியு ‘தரு மபுரி டிஸ்ட்ரிக்ட் டெக்ஸ்டைல் மில் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் நல்லம் பள்ளி இந்தியன் வங்கி முன்பு ஆர்ப் பாட்டம் திங்களன்று நடைபெற்றது. பஞ்சாலைச் தொழிலாளர்களுக் குகு 2024-2025 ஆம் ஆண்டிற்கு போனஸ் 20 சதவீதம், ஊக்கத் தொகை 10 சதவீதம் வழங்க வேண் டும். சட்ட விரோதமாக ஓராண்டு கால மாக மூடி கிடக்கும் பி.எம்.பி, பஞ் சாலையை திறந்து தொழிலாளர்க ளுக்கு வேலை வழங்க வேண்டும். பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26,000/- வழங்க வேண்டும். பஞ்சாலைத் தொழிலாளர்க ளுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். பஞ்சாலைத் தொழிலா ளர்களுக்கு இஎஸ்ஐ உச்சவரம்பு ரூ.21,000/- என்பதை நீக்க வேண் டும். தமிழக அரசாணைப்படி பஞ் சாலைகளின் பணி புரியும் பயிற்சி யாளர்களுக்கு தினசரி குறைந்த பட்ச ஊதியம் ரூ.552/-வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட் டது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. ஆறுமுகம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் சி.கலாவதி, மாவட்டப் பொருளா ளர் எஸ். சண்முகம், ஆகியோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றி னர். இதில், சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் எம். கண்ணதா சன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகி கள் உரையாற்றினர். இதில், திரளா னோர் பங்கேற்றனர். முடிவில், பி. கோபால் நன்றி கூறினார்.
