tamilnadu

img

சிஐடியு என்எல்சி பொருளாளர் எம்.சீனிவாசன் - எ.சந்திரா இல்ல திருமண விழா

சிஐடியு என்எல்சி பொருளாளர் எம்.சீனிவாசன் - எ.சந்திரா இல்ல திருமண விழா

என்எல்சி தொழிற்சங்க சிஐடியு பொருளாளர் எம். சீனிவாசன், எ.சந்திரா இல்ல திருமண விழா புதன்கிழமை நெய்வேலியில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர், சிஐடியு மாவட்ட பொருளாளர், என்எல்சி தொழிற்சங்க பொருளாளர் எம்.சீனிவாசன் - ஏ.சந்திராவின்  மகன் சி.எஸ். ஜீவா. எம்.கண்ணனூர் டி.முத்தரசு (லேட்) - எம்.ஞானசௌந்தரி ஆகியோரின் மகள் எம்.சுவாதியின் திருமணம் நெய்வேலியில் நடைபெற்றது. சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.  திமுக லால்குடி தொகுதி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன், காங்கிரஸ் தலைவர் ஜெயபிரகாஷ், சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாரன் முன்னிலை வகித்தார். சிபிஎம் நெய்வேலி நகர செயலாளர் ஆர். பாலமுருகன் வரவேற்றார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, சிஐடியு மாநில துணைத் தலைவர் பி.கருப்பையன், என்எல்சி சிஐடியு பொதுச்செயலாளர் எஸ்.திரு அரசு, தலைவர் டி.ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு வாழ்த்தினர். மணமகனின் தந்தை எம். சீனிவாசன் நன்றி கூறினார்.