சென்னை, ஜூன் 18- சிஐடியு தலையீட்டை தொடர்ந்து சிட்லப்பாக்கம் பேரூராட்சி துப்புரவு தொழி லாளர்களுக்கு ஊதியம் கிடைத்தது. 2 மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்து ஜூன் 13ந் தேதி முதல் சிட்லப் பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் துப்பு ரவு ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். ஜூன் 15 அன்று சிஐ டியு தலைவர்கள் தலையீட்டை தொடர்ந்து இரண்டு நாட்களில் ஊதியம் வழங்குவ தாக செயல் அலுவலர் உறுதி கூறினார். அதன்படி வழங்கவில்லை. இதனையடுத்து வியாழனன்று (ஜூன் 18) தொழிலாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதனை யடுத்து உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) தென்சென்னை மாவட்டச் செய லாளர் என்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆதி கேசவலு, டி.சந்துரு ஆகியோர் செயல் அலு வலருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இத னையடுத்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது.