என்எல்சி நிறுவனத்தில் எப்டிஇ நியமனத்தை கைவிட சிஐடியு கோரிக்கை
கடலூர், செப்.10- நெய்வேலி என்எல்சி இந்தியா நிறு வனத்தில் எப்டிஇ முறையில் நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது. என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கம் (சிஐடியு) நிர்வாகிகள் கூட்டம் தலை வர் டி.ஜெயராமன் தலைமையில் நெய்வேலி யில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் எஸ்.திரு அரசு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தீர்மானம் என்எல்சி நிறுவனத்தில் எப்டிஇ (ஓர் ஆண்டு& இரண்டு ஆண்டு) முறையில் பொறியாளர், அதிகாரிகள் பணிக்கு தேர்வு செய்ய விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதை சிஐடியு கண்டிக்கிறது. என்எல்சியில் எந்த ஒரு பணியிடத்திற்கும் எப்டிஇ நிய மனம் செய்யக்கூடாது மற்றும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு முழுமையான காலமும் பணியாற்ற கூடிய வகையில் புதியவர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது.