என்எல்சியில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உடனே நிரப்ப சிஐடியு கோரிக்கை
கடலூர், செப். 15 - என்எல்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பத்தாயிரம் இடங்களை நிரப்ப வேண்டும் என்று சிஐடியு தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. நெய்வேலி சிஐடியு என்எல்சி தொழி லாளர் ஊழியர் சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டத்திற்கு தலைவர் டி.ஜெய ராமன் தலைமை தாங்கினார். சங்கத்தின் துணைத் தலைவர் ஏ.ஆரோக்கியதாஸ் சங்க கொடியை ஏற்றி வைத்தார். இணைச் செயலாளர் பி.புண்ணியமூர்த்தி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். துணைத் தலைவர் வி.குமார் வரவேற்றார். பொதுச் செயலாளர் எஸ்.திருஅரசு வேலை அறிக்கை சமர்ப்பித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன் துவக்கி வைத்துப் பேசினார்.செய லாளர் டி.பழனிவேல், துணைத் தலை வர் ஏ.வேல்முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்கத்தின் சிறப்பு தலை வரும் சிஐடியு மாநில உதவி பொதுச் செய லாளருமான எஸ்.கண்ணன் நிறைவுரை யாற்றினார். நிர்வாகிகள் தேர்வு சிறப்பு தலைவராக எஸ்.கண்ணன், தலைவராக எஸ்.திருஅரசு, பொதுச் செய லாளராக பி.பழனிவேல், பொருளாளராக எஸ்.வேலாயுதம், அலுவலக செயலாளராக ஜெ.சாமுவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் என்எல்சியில் காலியாக உள்ள பத்தாயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும். இன்கோவிலில் இருந்து நிரந்தர மான தொழிலாளர்களுக்கு டபிள்யூ 3 ஸ்கேல் வழங்க வேண்டும். அபராதமாக பிடிக்கப்பட்ட ஆறு நாள் சம்பளம், சி.ஆப் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். என்.எஸ்யூ முதல் மந்தாரக் குப்பம் பேருந்து நிலையம் வரை நிலக்கரியை எடுத்து வரும் வாக னங்களுக்கு தனிப்பாதை அமைத்திட வேண்டும் அல்லது கன்வேயர் பெல்ட் மூலம் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போரா ட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.