tamilnadu

img

மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறுக சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறுக சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

ஈரோடு, ஆக.10- மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்டோ தொழிலா ளர் சங்கம் வலியுறுத்தியுள் ளது. சிஐடியு ஈரோடு மாவட்ட  ஆட்டோ தொழிலாளர் சங் கத்தின் 26 ஆவது ஆண்டு மகாசபை, ஞாயி றன்று தோழர் டி.பி.முத்துசாமி நினைவகத் தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர்  சி.வடிவேல் தலைமை வகித்தார். இஸ் மாயில் உசேன் வரவேற்றார். சம்மேளன துணை பொதுச்செயலாளர் சந்திரசேக ரன் துவக்கவுரையாற்றினார். சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் பி.கனகராஜ் வாழ்த்திப் பேசினார். இக்கூட்டத்தில், சொந்த வீடில் லாத ஆட்டோ தொழிலாளர்களுக்கு நகர்ப் புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம்  முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்க  வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும். விபத்து நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட் டத் தலைவராக சி.வடிவேல், பொதுச்செய லாளராக எஸ்.ஷேக் தாவூத், பொருளாளராக கே.ஸ்ரீதர், துணைத்தலைவர்களாக என். வேணுகோபால், பி.ராஜன், எம்.எஸ்.இஸ் மாயில் உசேன், உதவிச்செயலாளர்களாக வி.செல்லதுரை, கோபு, எஸ்.செந்தில்குமார்  உட்பட 9 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு  செய்யப்பட்டது. சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் நிறைவுரையாற்றினார்.