tamilnadu

ஆண்ட்ரூயூல் சங்க தேர்தலில் சிஐடியு வெற்றி

சென்னை, ஏப். 25 -அண்ட்ரூயூல் கம்பெனி தொழிற்சங்கத் தேர்தலில் சிஐடியு அணி வெற்றி பெற்றது.ராஜீவ்காந்தி தகவல் தொழில்நுட்ப அதிவிரைவு சாலை (ஓஎம்ஆர்)யில்,மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆண்ட்ரூயூல் அண்டு கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு அதிசக்தி வாய்ந்த மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்ஸ்) உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிறுவனத்திற்கு கொல்கத்தாவிலும் உற்பத்திமையங்கள் உள்ளன.இந்நிறுவனத்தில் சென்னை உற்பத்தி பிரிவில் 60க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங்குதொழிலாளர்கள் டிரான்ஸ்பார்மர் அண்டு சுவிட்ச்கியர் எம்ப்ளாயீஸ் யூனியன் (சிஐடியு), எல்பிஎப்ஆகிய 2 சங்கங்கள் செயல்பட்டு வந்தன.அண்மையில் பணிகளை அவுட்சோர்சிங் விட்டதை எதிர்த்து 8 நாட்களும், தொழில் பழகுநர்களை (ஆக்ட் அப்பரண்டீஸ்) நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்துவதையும் எதிர்த்து 6 நாட்களும் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வெற்றிபெற்றனர். 2 வருடங்களாக ஊதிய உயர்வு வழங்காமல் உள்ள ஊதியஉயர்வை வழங்க தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நிறுவனம் 6 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தொழிலாளர்களின் வீடுகளுக்கு நிர்வாகம் கடிதம் அனுப்பியது. இதுகுறித்து கேள்விஎழுப்பிய 2 தொழிலாளர்களை நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் செய்தது. இதனையடுத்து சிஐடியு தலைவர்கள் கே.விஜயன், எஸ்.அப்பனு உள்ளிட்டோர் நிர்வாகத்தின் துணை பொது மேலாளர் ஜி.ஆர்.புகழேந்தியுடன் பேச்சு நடத்தினர். இதில் 2 பேரின் தற்காலிக பணிநீக்கம் ரத்து செய்யப்பட்டது.இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற தொழிற்சங்கத் தேர்தலில் சங்கத்தின் தலைவராக எஸ்.அப்பனு, பொதுச் செயலாளராக பி.கருணாகரன், பொருளாளராக டி.ரங்கநாதன், துணைத்தலைவர்களாக டி.சீனிவாசன், டி.விஜயகுமார், கே.பாலநாராயணன், துணைச் செயலாளர்களாக ஜி.சேகர், எஸ்.கார்த்திகேயன், பி.ஐயப்பன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

;