tamilnadu

img

முதலமைச்சரின் தாயார் மறைவு: தலைவர்கள் இரங்கல்...

சென்னை:
முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி தாயார் தவசாயி அம்மாள்(93) சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

தாயாரின் மறைவு செய்தியை அறிந்த முதலமைச்சர் எடப்பாடி உடனடியாக சேலம் சென்று தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தவசாயம்மாளுக்கு பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர்.இதையடுத்து முதலமைச்சரின் சுற்றுப்பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தூத்துக் குடி, குமரி, விருதுநகரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவிருந்த ஆய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங் கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:முதலமைச்சர் தாயார் மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு மனவேதனைக்கு உள்ளானேன். அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதலமைச்சர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம், இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.இதேபோல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆர்.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் முதலமைச்சரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இரங் கல் தெரிவித்து ஆறுதல் கூறினர்.