tamilnadu

img

படகு கட்டுவதற்கு நிவாரணம் வழங்க முதல்வர் ரங்கசரமி உத்தரவு

படகு கட்டுவதற்கு நிவாரணம் வழங்க முதல்வர் ரங்கசரமி உத்தரவு

புதுச்சேரி, அக்.24- மீனவர்கள் படகு கட்டுவதற்கு நிவா ரணத்திற்கான  ஆணையை முதல்வர் ரங்க சாமி வெள்ளியன்று(அக்.24) வழங்கினார். ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு” திட்டத்தின் கீழ் புதுச்சேரி யூனியன் ஆட்சிப் பரப்பை சேர்ந்த 5 நபர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டுவதற்கு 60 விழுக்காடு மானியத்தில் நபர் ஒன்றுக்கு ரூ.72 லட்சம் வீதம், மீன்பிடி படகு கட்டுவதற்கான ஆணை களையும், புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 3 ஆயிரம் பைபர் மீன்பிடி படகுகளில், முதற்கட்டமாக   மீனவர் கூட்டுறவு சம்மேளனத்தின் மூலம் நிறுவப்பட்டுள்ள பெட்ரோல்,டீசல் பங்கில்  வீராம்பட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்த பதிவு பெற்ற மற்றும் காப்பீடு செய்யப்பட்ட 120 வெளிப்புறம் இயந்திரம் பொருத்திய பைபர் படகுகளுக்கு டீசல் மானியம் (விற்பனை வரி நீங்கலாக) வழங்கு வதற்காண  மானிய புத்தகம் ஆகியவற்றை  முதல்வர்  ரங்கசாமி  சட்டப்பேரவையில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலை வர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர்  லட்சுமிநாராயணன், இயக்குநர் முகமது இஸ்மாயில், உள்ளிட்ட அதிகாரிகள்  உடனிருந்தனர்.