tamilnadu

img

சூடான் நாட்டில் மரணமடைந்த 3 தமிழர் குடும்பத்துக்கு நிதியுதவி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை,ஜன.5- ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் சமீபத்தில் நடைபெற்ற ஆலை விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3லட்சம் வழங்க முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள சூடான் நாட்டில் இயங்கி வரும் செராமிக் டைல்ஸ் கம்பெனியில் 3.12.2019 அன்று கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த, நாகப்பட்டினம் மாவட்டம், அகரகொந்தகை கிரா மத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் ராமகிருஷ்ணன் மற்றும் கடலூர் மாவட்டம், விருதா சலம் வட்டம், செம்படாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த செல்வராசு என்பவரின மகன் ஜெயக்குமார் பண்ருட்டி வட்டம், மானாடி குப்பன் கிராமத்தைச் சேர்ந்த முருவன் என்பவரின் மகன் ராஜ சேகர் ஆகிய மூவரும் உயிரிழந்த னர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்து துயரச் செய்தியை அறிந்த உடனேயே, சூடான் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு, அவர்களது குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்குமாறு பிரதமர் மோடியை 4.12.2019 அன்று நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உயிழந்தவர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேற்கண்ட துயரச் சம்ப வத்தில் உயிரிழந்த ராம கிருஷ்ணன்,ஜெயக்குமார் மற்றும் ராஜசேகர் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தை யும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த துயரச் சம்பவத்தில் உயி ரிழந்தவர்களின் குடும்பங்க ளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா  ரூ.3 லட்சம் வழங்க நான் உத்தர விட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.

;