சென்னை, நவ.7- திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் செவ்வாயன்று (நவ.7) தனது 69-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! நலம் சூழ வாழ்க பல்லாண்டு” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர், திரைப்படத் தயாரிப் பாளர், இயக்குநர், தொலைக்காட்சி தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனப் பன்முகத் திறமை கொண்ட கமல்ஹா சனுக்கு பாமக தலைவர் மருத்துவர் ச.ராமதாஸ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த னர்.
கமல்ஹாசன் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனைக்கு, காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை நன்கொடையாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு, எழும்பூர் தொகுதி எம்எல்ஏ பரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.