tamilnadu

img

தமிழகத்தில் மே தினக் கொண்டாட்டம்: மாவட்ட அதிகாரிகள் மூலம் அனுமதி!

ன்னை, ஏப்.24- தமிழ்நாட்டில் மே தின நிகழ்ச்சி களுக்கு அனுமதி கேட்டு கடிதம் வந்துள்ளது என்றும் இதற்கான அனுமதி மாவட்ட தேர்தல் அதிகாரி களால் வழங்கப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவ டைந்தாலும், தேர்தல் நடத்தை விதி கள் தொடர்ந்து அமலில் உள்ள தால், மே தினம் உள்ளிட்ட நிகழ்ச்சி களுக்கு தேர்தல் துறையின் அனு மதி பெற வேண்டும்.  இதை கருத்தில் கொண்டு தமி ழக தலைமை தேர்தல் அதிகாரி யிடம் சிஐடியு பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் சார்பில் மே தினக் கொண்டாட்டத்திற்கு அனுமதி கோரப்பட்டது. “தமிழ்நாட்டில் 2024 மக்க ளவை தேர்தலையொட்டி, தேர்தல்  நடத்தை விதிகள் அமலாக்கப் பட்டன.

இதன் காரணமாக தொழிற்  சாலைகள் வாயில்கள், பணிமனை கள் மற்றும் ஆட்டோ நிறுத்தங்கள்  உள்ளிட்ட பகுதிகளில் தொழிற் சங்க தகவல் பலகைகள், கொடி மரங்கள் மூடி மறைக்கப்பட்டும் சில இடங்களில் அகற்றப்பட்டும் உள்ளன. வாக்குப்பதிவு ஏப்ரல் 19 அன்று முடிவடைந்த நிலையில், ஜூன் 4 அன்று தான் வாக்கு எண் ணிக்கை நடைபெறுகிறது. இதற்கிடையில், மே 1 அன்று  உலகத் தொழிலாளர் தினமான மே  தினம் கொண்டாட வேண்டியுள் ளது.

இதற்கான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டபோது, சில அதி காரிகள் தேர்தல் நடத்தை விதிகள்  அமலில் இருப்பதாக கூறி வரு கின்றனர். எனவே, தமிழ்நாட்டில் தொழி லாளர்களின் உரிமை தினமான மே தினத்தன்று பொது விடுமுறை  அளிக்கும் சட்ட ரீதியிலான நடை முறை இருந்து வருகிறது என்பதை  தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். ஆகவே, மே 1 அன்று தமிழ்நாட் டில் மே தின நிகழ்ச்சிகளுக்கும், தொழிற்சங்க பெயர்ப் பலகை திறப்பு, கொடி ஏற்றுதல், பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி கள் நடத்துவதற்கு உரிய வழிகாட்டு தலை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஐடியு பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், துணைப் பொதுச் செயலாளர் கே. திருச்செல்வன், நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக் குழு உறுப்பினர் ஆறுமுக நயி னார் ஆகியோர் சென்னை தலை மைச் செயலகத்தில் மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து இது தொடர்பாக நேரில் கடிதம் கொடுத்  துள்ளனர். இதுகுறித்து தலைமை தேர்தல்  அதிகாரி சத்யபிரதா சாகு செய்தி யாளர்களிடம் கூறுகையில், ‘‘மே  தின நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக அனுமதி கோரப்பட் டது. இதற்கான அனுமதிகளை அந்  தந்த மாவட்ட தேர்தல் அதிகாரி கள் தான் வழங்க வேண்டும் என்ப தால், மாவட்ட நிர்வாகங்களுக்கு தெரிவிக்கப்பட உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

;