சிதம்பரம் பாசுபதேஸ்வரர் கோயில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்
சிதம்பரம், ஜூலை 12- சிதம்பரம் அண்ணாமலை நகரில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாசுபதேஸ்வரர் கோயில் சீரமைப்பு பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். ரூ. 1 கோடியே 7 லட்சம் செல வில் நடைபெறும் இந்த சீர மைப்பு பணிகள் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக த்தின் கீழ் மேற்கொள்ளப்படு கின்றன. திருவேட்களத்தில் அமைந்துள்ள இந்த கோயில் திருநாவுக்கரசர், திரு ஞான சம்பந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்க ளில் சோழ நாடுகாவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள இரண்டாவது சிவத்தலமாகும். வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கோரிக்கை யின் பேரில் முதல்வர் இந்த நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். காணொளி காட்சி வாயி லாக முதல்வர் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து பாசுபதேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை நகர் பேரூ ராட்சி தலைவர் பழனி குத்து விளக்கேற்றி வரவேற்றார். கோவில் அறங்காவலர் பெத்த பெருமாள், கோயில் ஆய்வாளர் சீனிவாசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, கவுன்சிலர் அன்பரசன் ஆகி யோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ‘அதே நேரத்தில், சிதம்பரம் அருகே தாண்டவராயன் சோழகன் பேட்டை கிராமத்தில் ரூபாய் 5 கோடியே 30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
