tamilnadu

செய்யூர் தாலுக்கா மருத்துவமனை ஆய்வு செய்யப்படும்: அமைச்சர்

சென்னை, ஜூலை 18-  காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரில் அரசு தாலுக்கா மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இம்மருத்துவ மனையில் செய்யூர் தாலு காவிற்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்களும், கிழக்கு கடற்கரைச் சாலை விபத்தில் படுகாயம் அடை பவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  செய்யூர் அரசு தாலுக்கா மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் இல்லை. சமையலறை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்ட டங்கள் பழுதடைந்துள்ளது. இதனால், மேல் சிகிச்சை க்காக 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது. எனவே தாலுக்கா மருத்துவமனையைத் தரம் உயர்த்தி போதிய மருத்துவர்கள்,  பணி யாளர்களை நியமிக்க வேண்டும் என வியாழனன்று (ஜூலை 18) நடைபெற்ற சட்டப் பேரவையில் செய்யூர் தொகுதி திமுக உறுப்பினர் மருத்துவர் ஆர்.டி.அரசு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய சுகாராதம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாது:- செய்யூர் தாலுகா மருத்துவமனையில்  50 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டுவரும் வட்ட மருத்துவமனையில்  5 உதவி மருத்துவர்கள், 1 உதவி பல் மருத்துவர், 1 செவிலியர் கண்காணிப்பாளர், 6 நிரந்த செவிலியர்கள், 2 ஒப்பந்த செவிலியர்கள், 3 மருந்தாளு நர்,  1நுன் கதிர்  வீச்சாளர்,  2 அமைச்சு பணியாளர்கள்,  மற்றும் 19 மருத்துவம் மற்றும் மருத்துவம் சார பணியாளர்கள் பணியில் உள்ளனர். மேலும்  ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு மகப்பேறு பிரிவு சிரியவகை அறுவை சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டுவருகின்றது. மாவட்ட ஆட்சியரின் நிதியின் கீழ் ரூபாய் 10 லட்சம் செலவில் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடமும் கட்டப்பட்டுள்ளது. சட்ட மன்ற உறுப்பினர் கூறியுள்ள குறைகள் துறைசார் அலு வலர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு படிப்படியாக சரி செய்யப்ப டும். இவ்வாறு அவர் பேசி னார்.