tamilnadu

img

மாணவர் தற்கொலை - ஐஐடி பேராசிரியர் பணியிடை நீக்கம்

சென்னை ஐஐடி-யில் கடந்த மார்ச் மாதம் ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஐஐடி-யில், மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் குமார் ஜெயின் (வயது 31) பி.எச்.டி படித்து வந்துள்ளார். கடந்த மார்ச் 31-ஆம் தேதி, வகுப்பு முடிந்து தனது வீட்டிற்குத் திரும்பிய சச்சின் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை ஐஐடி-யில் நடந்த மாணவர்கள் தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 
இந்த நிலையில், பேராசிரியர் ஆசிஷ்குமார் சென், மாணவர்கள் முன்னிலையில் சச்சின் குமாரை அவமானப்படுத்தும் நோக்கில் பேசியதில் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை முடிவை எடுத்ததாக ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி தலைமையில் விசாரணை குழு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை அடுத்து, பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.