tamilnadu

ஆக்ரோஷமான நாய்களை வளர்க்கக் கூடாது சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

ஆக்ரோஷமான  நாய்களை வளர்க்கக் கூடாது

சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை, ஆக.20  சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாய்களை வீடுகள், தெருக்கள், பூங் காக்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் முகமூடி இன்றி  திரியவிட் டாலோ, அழைத்து சென்றாலோ உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.  மேலும் அவ்வாறான நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகள் மீது இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்களுக்கு அச்சம் மூட்டும் வகையில் ஆக்ரோஷமான  தன்மை கொண்ட நாய்களை வளர்க்க கூடாது.  மேலும் பொது இடங்களுக்கு ஒரே நேரத்தில் ஒரு செல்லப்பிராணியை மட்டுமே அதன் உரிமையாளர்கள் எடுத்து செல்ல வேண்டும். ஏற்கனவே குறிப் பிட்டுள்ளவாறு அந்த செல்லப் பிராணியை அழைத்து செல்லும் பொழுது  மற்றவர்கள் பாதுகாப்பை  கருதி அதன் வாயை மூடியிருக்க (Muzzle) செய்தும், கட்டாயம் கழுத்துப் பட்டையுடன் சங்கிலியால் கட்டி வைத்திருக்கவும் வேண்டும். சென்னை மாநகராட்சியில்  உரிமம் மற்றும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி  செலுத்தப்பட்ட நாய்கள் மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல அனுமதிக்கப்படும். விலங்குகளின் நடவடிக்கைகள் நன்கு அறிமுகமான மனிதர்கள் மற்றும் அதன் இருப்பிட சூழ்நிலையில் இயல்பு நிலையிலும் மற்ற இடங்களில் மாறுபட்டும் இருக்கக் கூடும்.  இதனை உரிமை யாளர்கள் உணர்ந்து கொண்டு பொறுப்புணர்வுடன் பிறருக்கு இடை யூறு ஏற்படாத வண்ணம் இவற்றை வளர்க்க வேண்டும் என்றும் மாநகராட்சி கூறியுள்ளது.  செல்லப்பிராணிகளின்  உரிமை யாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருக்க வேண்டும். செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பி டம் முதலியவற்றை வழங்கி பராமரிக் கவும், பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் பொழுது கழுத்துப்பட்டை யுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை  கண்டிப்பாக  தவிர்க்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது