tamilnadu

img

அர்ஜூன் சம்பத் விரட்டியடிப்பு!

அம்பேத்கர் சிலைக்கு மாலையிட முயன்ற அர்ஜூன் சம்பத்தை  பெரியார் மற்றும் அம்பேத்கர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர். அம்பேத்கரின் நினைவு தினமான இன்று (டிச.06) நாடு முழுவதும் அம்பேத்கர் சிலைக்கு பொதுமக்களும் பிரதான அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் முற்பட்டதாகத் தெரிகிறது. 

இந்நிலையில், சனாதனக் கொள்கை பரப்பாளராக செயல்படும் இவர், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதா எனக்கூறி அங்கிருந்த பெரியார் மற்றும் அம்பேத்கர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் அர்ஜூன் சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதை தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

;