சென்னை,பிப்.10- பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள தாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- சென்னை சென்ட்ரல் மற்றும் அரக் கோணம் பிரிவில் வரும் 12 ஆம் தேதி இரவு 12.05 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், மூர்மார்க்கெட்டில் இருந்து 11 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு திருவள்ளூர் நோக்கி புறப்படும் ரயில், கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அண்ணனூர், இந்து கல்லூரி, பட்டாபிராம் ஆகிய ரயில் நிலை யங்களில் நிற்காது. இதேபோல், மூர்மார்க்கெட்டில் இருந்து 12ஆம் தேதி இரவு 12.15 மணிக்கு ஆவடிக்கு புறப்படும் ரயில் கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயல், அண்ணனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது. சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்திற்கு 12ஆம் தேதி இரவு 1.20 மணிக்கு புறப்படும் ரயில் கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லை வாயல், அண்ணனூர், இந்து கல்லூரி, பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.