tamilnadu

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஏப். 18- வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை இருக்கும் என்று எதிர்பார்க் கப்பட்ட நிலையில், அதற்கான சூழல் மாறிவிட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. உள் தமிழகத்தில் இன்று இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருநெல்வேலி ஆகிய 14 மாவட்டங்களில், இயல்பை விட வெப்பம் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்.சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகப்பட்சமாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

;