சென்னை, ஜூன் 14- வெப்பச்சலனம் காரணமாக புதனன்று (ஜூன் 15) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டு க்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.