சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கன மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்டியஸை ஒட்டி இருக்கும்.மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.