tamilnadu

img

டிச.16,17-இல் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, டிச.16 மற்றும் 17-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

டிச.18,19-ஆம் தேதிகளிலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

;