tamilnadu

14 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,ஜூன் 15- தமிழகப் பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக ஜூன் 16,17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி  நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன்  காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான  மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வும் சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 - 38 டிகிரி செல்சியஸ்  ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;