tamilnadu

முதுகெலும்பு பிளவு குழந்தைகளுக்கு சென்னையில் கருமுனை அறுவை சிகிச்சை

சென்னை, ஏப்.3


முதுகெலும்பு பிளவு குழந்தைகளுக்கு தென் கிழக்கு ஆசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் அதற்கான சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.கருவில் உள்ள குழந்தை உடல்ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப்படுத்தஅல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுப்பார்கள்.அப்போது அதன் முதுகின் அடிப்பகுதியில் வீக்கம் போன்று எதாவது தோன்றியிருந்தால் அதை கருவில் இருக்கும்போதே சரி செய்வது நல்லது. அப்போதுதான் பிறந்தபின்னர் அந்த குழந்தைக்கு எந்தபிரச்சனையும் இருக்காது. இல்லையென்றால் கால்கள் செயலிழப்பு, மலம், சிறுநீர் கழித்தலில் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே கருவுற்ற தாய்மார்கள் 24 முதல் 26வது வாரத்திற்குள் வழக்கமான ஸ்கேன் பரிசோதனை செய்யும்போது ஏதாவது பிரச்சனை தென்பட்டால் உடனே அல்ட்ரா சவுண்ட் எடுத்துப்பார்க்கவேண்டும்.கருவில் உள்ள குழந்தையின் கீழ் முதுகில் வீக்கம் போன்று தென்பட்டால் உடனே அதை சரி செய்ய பல்வேறு துறைகளின் ஒத்துழைப்போடு அறுவைசிகிச்சை செய்வது அவசியம். இத்தகைய அறுவை சிகிச்சைக்கு கருமுனை நரம்பியல் அறுவை சிகிச்சை என்று அழைப்பர்.இந்தியாவில் ஒவ்வொறு ஆண்டும்முதுகெலும்பு பிளவுடன் 25ஆயிரம்குழந்தைகள் பிறக்கின்றன என்று கூறும் சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் நரம்பியல் மற்றும் முதுகுத் தண்டுவட கோளாறுகள் நிலைய இயக்குநரும் குழுமத்தலைவருமான கே.சிறீதர், ஆயிரம் குழந்தைகள் பிறந்தால் 2குழந்தைகளுக்கு இந்தப்பிரச்சனை உள்ளது என்றார். தாயின் கருப்பையில் இருக்கும் முதிர்கரு சிசுவின் முதுகுத்தண்டுவடம் வளர்ச்சியடையாத நிலையில் முதுகெலும்பு பிளவு ஏற்படுகிறது என்கிறார். மரபணு கோளாறு, தாய்க்கு இரும்புச் சத்துகுறைவு உள்ளிட்ட பிரச்சனைகளால் இது ஏற்படலாம் என்றும் அவர் கூறினார். கருவிலேயே அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் குடல்பிதுங்குதல் உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளை தவிர்க்க முடியும் என்றார்.கர்ப்பிணிப்பெண்களின் உடல் நிலை, சிசுவின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இத்தகைய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும்கூறினார். முன்னதாக கருமுனை அறுவை சிகிச்சை குறித்து எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சென்னையை சேர்ந்த குழந்தை மருத்துவர்கள். மகப்பேறு மருத்துவர்கள், நரம்பியல்அறுவை சிகிச்சை மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் உள்பட பல்வேறு துறைகளைசேர்ந்த மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்ட பயிலரங்கம் நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் புளோரிடா அர்னல்ட் பாமர் குழந்தைகள் நல மருத்துவமனையின் நரம்பியல் அறிவியல் மைய நரம்பியல் இயக்குநர் டாக்டர் சமீர் எல்பாபா, மெடிஸ்கேன் இயக்குநர் டாக்டர் இந்திரணி சுரேஷ், கே.ஜி.ஹெச் இயக்குநர் டாக்டர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

;