tamilnadu

img

வடிவேல் பாலாஜி குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்

சென்னை:
உடல்நலக்குறைவால் காலமான நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல், சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் வடிவேல் பாலாஜியின் குடும்பத்தினருக்கு விஜய்சேதுபதி நிதியுதவி வழங்கினார்.இந்நிலையில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன், வடிவேல் பாலாஜியின் மகன் மற்றும் மகளின் படிப்பு செலவை ஏற்பதாக அறிவித்துள்ளார். நடிகர் தாடி பாலாஜி, பெப்சி சங்கத்தினர், நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், நடிகை ஆர்த்தி, நடிகர் ராமர், மிமிக்ரி கலைஞர் சேது மற்றும் வடிவேல்பாலாஜியுடன் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி ஆகியோரும் வடிவேல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் தனுஷ், கார்த்திக் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

;