tamilnadu

உடலியக்க குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்கும் மையம்

சென்னை, ஏப். 11-உடலியக்கக் குறைபாடுகளுக்கான நவீன சிகிச்சை மையத்தை தென்னிந்தியாவில் அப்பல்லோ மருத்துவகுழுமம் தொடங்கியுள்ளது. உடல் இயக்க குறைபாடுகளுக்கான தென்னிந்தியாவில் முதல் மருத்துவமனை என்ற பெயரைப் பெற்றுள்ளது. இந்த மையம். மருத்துவமனையின் செயல்பாட்டு நரம்பியல் அறுவைசிகிச்சைப் பிரிவின் குழு ஆலோசகர் பேராசிரியர் டாக்டர் பரேஷ்கே.தோஷி முன்னிலையில் இந்த மையம் திறந்து வைக்கப்பட்டது.இந்த விரிவான மையமானது, பார்க்கின்சன்ஸ் நோய் எனப்படும் நடுக்கு வாதம் உள்ளிட்ட உடலியக்கக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அனைத்து கோணங்களிலும் அதிநவீன மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளையும் அவை தொடர்பான துணை சிகிச்சைகளையும் வழங்கும் என்று அவர் கூறினார். பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் இந்தியாவில் தற்போது ஒரு லட்சம் பேருக்கு 300 முதல் 400 பேர் வரை என்ற அளவில் உள்ளது.  

;