tamilnadu

img

மின் நுகர்வோர் சேவை மையம்: முதலமைச்சர் திறந்து வைத்தார்...

சென்னை:
தமிழகம் முழுவதும் இருந்து வரும் அழைப்புகளுக்கு மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாசாலை யில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக தலைமை அலுவலகத்தில் மின் நுகர்வோர் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தயாநிதி மாறன் எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்றனர். மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தமிழகம் முழுவதும் இருந்து வரும் அழைப்புகளுக்கு இச்சேவை மையம் மூலம் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.