tamilnadu

img

கார்த்திக் சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் எம்.பி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. 

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் ஒன்றிய அமைச்சராக இருந்தபோது 250 சீனர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட இந்த விசாக்களில் முறைகேடு நடந்துள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள்  குற்றம் சாட்டி உள்ளனர்.
250 சீனர்களுக்கும் சட்ட விரோதமாக விசா வழங்குவதற்கு கார்த்திக் சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் சென்னையில் 3 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. மும்பையில் 2 இடங்களில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் டெல்லியில் உள்ள சிதம்பரம் வீட்டிலும் சோதனை நடத்தினர். கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் தலா ஒரு இடத்தில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது லண்டனில் உள்ள கார்த்திக் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "எத்தனை முறை என்று எனக்கு சரியாக நினைவில்லை. ஆனால் நிச்சயமாக சாதனை எண்ணிக்கைதான்" என்று பதிவிட்டுள்ளார்.
 

;